Archives: மார்ச் 2024

தேவனால் அறியப்படுதல்

ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு கேட்டார்: "யார் இந்த அந்நியன்?". ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுப்பு மூலம் பிரிக்கப்பட்ட அந்த இளைஞன் ஒரு பதிலை அனுப்பினான், அதில் மற்ற மாணவருக்குப் பிறக்கும் போது என்ன பெயர் வைக்கப்பட்டது என்று கேட்டார். அவர் உடனடியாக, "டைலர்" என்று பதிலளித்தார். மற்றவர் பதிலளித்தார், “ஆம்!!! நீ என் சகோதரன்!" என்று அவர் பெயரால்…

துப்பறியும் வேலை

1986 ஆம் ஆண்டில், துப்பறியும் ஹெர்குல் பாய்ரோட் வேடத்தில் பெயர் பெற்ற ஆங்கில நடிகரான சர் டேவிட் சுசெட், இயேசுவின் உயிர்த்தெழுதலைப் புரிந்துகொள்ள ஒரு தேடலைத் தொடங்கினார். அவர் மரித்த பிறகு என்னவாகும் என்று சிந்தித்த அவர், ரோமருக்கான நிருபத்தைப் படிக்க ஆரம்பித்தார். இருபது ஆண்டுகள் கவனமாகப் பரிசீலித்த பிறகு, அவர் இயேசுவை முழுமையாக நம்பினார்.

கொரிந்தியர்களுக்கான பவுலின் முதலாம் நிருபத்தை எதிரொலித்து, "உயிர்த்தெழுதல் இல்லாமல் நம்பிக்கை இல்லை" என்று சுசேட் முடித்தார். ஆகவே, தான் நம்புவது "இயேசுவின் மரணம், சிலுவையில் அறையப்படுதல் மட்டுமல்ல, உயிர்த்தெழுதலையும்…

வசந்தம் குளிர்காலத்தைப் பின்தொடர்வது போல

தன்னுடைய தேசம் எந்த ஒரு தூண்டுதலுமின்றி மற்றொரு தேசத்தின்மீது படையெடுத்ததை பற்றி எழுதிய "குற்றத்திற்காக" விசாரிக்கப்படுகையில், அந்த பத்திரிகையாளர் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டார். எனினும் அவர் தன்னை தற்காத்துக் கொள்ளவில்லை. மாறாக, தைரியமாகப் பேசினார். "நம் நாட்டை சூழ்ந்துள்ள இருள் மறையும் நாள் வரும், இரண்டும் இரண்டும் நான்குதான் அதுபோலவே ஒரு யுத்தத்தை யுத்தமென்று சொல்லி அதிகார மட்டத்தில் அங்கீகரிக்கப்படும்" என்று அவர் கூறினார். மேலும் கட்டுக்கடங்கா நம்பிக்கையுடன், அவர் தொடர்ந்தார்: "விறைக்கும் குளிர்காலத்திற்குப் பின்பு கூட வசந்த காலம் வருவதைப் போல…

துப்புரவாளரின் ஜெபம்

தன் தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவரைக் கண்ட ராசா, அவருக்கு இரங்கி கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அந்த நபர் அவருக்கு நன்றி சொல்லி, அவருக்காக ஜெபிக்கலாமா என்று ராசாவிடம் கேட்டார். ஆச்சரியப்பட்ட ராசா, என்ன பதில் சொல்வது என்று யோசித்தார், முரண்பாடாக உணர்ந்தாலும் அவரை சந்தோஷப்படுத்த விரும்பி, அவரும் சம்மதித்தார், துப்புரவுப் பணியாளர் பணத்திற்காகவும் ராசாவிற்காகவும் நன்றி செலுத்தி, "தேவனே, தயவுசெய்து இவருக்கு வழியையும் சத்தியத்தையும் ஜீவனையும் காட்டும்" என்று கூறினார்.

ராசா இந்த ஜெபத்தால் குழப்பமடைந்தார், ஆனால் அதை மறந்துவிட்டார். எனினும் ஆறு ஆண்டுகளுக்குப்…

தேவன் நினைத்தருள்கிறார்

சோக் சிங் கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தபோது, ​​அவளது வயதான அம்மா பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். பின்னர் அவளைப் பிரிந்திருந்த கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார், மேலும் அவர்களது இளம் மகனை உரிமைகோரி வழக்கு தொடருவதாக மிரட்டினார். சோக் சிங் ஒரு பாலைவனத்தில் நடப்பதைப் போல் உணர்ந்தாள், வாழ்க்கை முற்றிலும் வறட்சியானது. தேவன் இருக்கிறாரா? எத்தகைய சூழலில் நான் இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியுமா? என்று சந்தேகித்தாள்.

ஜெபிப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது. அப்போது…

முடிவுரை: நம்பிக்கை உண்டு

கடின சூழலில் கடக்க
இரண்டு பாதை உண்டு தெரிந்தெடுக்க
ஒரு பாதை விரக்தி, அது வேண்டாம்
நம்பிக்கை உண்டு இங்கே நடக்க.

வாழ்க்கையின் திகிலூட்டும், கசப்பான புயற்காற்றுகளை நாம் அனைவரும் சந்திப்போம். மேலே உள்ள வரிகள் நான் எழுதிய பாடலிலிருந்து, ஐந்து முறை புற்றுநோயின் பிடியிலிருந்து தப்பிய எனது பயணத்தைப் பிரதிபலிக்கிறது. மோசமான நிகழ்வுகள் மற்றும் அமைதியைக் குலைக்கும் நோய்கள் போன்றவை பனிக்கால மழை போல் நம்மீது விழுகையில், எளிதில் எதிர்கொள்ள இயலாது. எவ்வாறாயினும், விரக்தியில் மூழ்கி இருப்பதற்கு அல்லது நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு என்று…

Day 5

When Raza saw a man sweeping his street, he felt sorry for him and gave him some money. The man thanked him and asked Raza if he could pray for him. Surprised, Raza wondered how to answer, feeling conflicted but wanting to make the man happy. He consented and the sweeper prayed, giving thanks for the money and for Raza,…

மிக மேலானது

ஜார்ஜுக்கு இயேசுவைப் பற்றி பிறரிடம் சொல்வதில் மிகுந்த வாஞ்சை இருந்தது. அவர் தனது உயர்நிலைப் பள்ளியில் ஒரு நற்செய்தி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். தனது கல்லூரி நண்பர்கள் இருவரை, மெக்சிகோவில் வேதாகமத்தை விநியோகிக்க நியமித்தார். ஜார்ஜ் வெர்வர் பின்னர், ஆபரேஷன் மொபைலைசேஷன் (Operation Mobilization) என்ற சர்வதேச ஊழியத்தை நிறுவினார்.

அவர் பெரியளவில் வெற்றி பெற்றிருந்தாலும், வெர்வர் தான் செய்த தவறுகளையும் அறிந்திருந்தார். அவர் எழுதிய மெஸ்சியாலாஜி (Messiology) என்ற புத்தகத்தில், "நமது அலங்கோலங்களின் மத்தியில், அத்தருணத்தில் நாம் உணர்ந்ததைக் காட்டிலும் தேவன் அதிகமாகச் செய்து…

ஏக்கத்தில் இன்புறுதல்

எழுத்தாளர் சூசன் கெய்னின் ஆய்வின்படி, மக்கள் தங்கள் விருப்ப பாடல்களின் தொகுப்புகளில் மகிழ்ச்சியான பாடல்களைச் சராசரியாக 175 முறையும், சோகமான பாடல்களை 800 முறையும் கேட்கின்றனர். சோகமான இசை என்பது பலரை ஈர்ப்பது ஏன்? கெய்ன் இது ஏக்கத்திற்கான நமது பசியுடன் தொடர்புடையது என்றும், "துக்கத்துடன் கூடிய மகிழ்ச்சி. இது மிகவும் நேர்த்தியான ஒன்றை நாம் அனுபவிக்கும் போது அடிக்கடி உண்டாகிறது, அது இனம் புரியாத இடத்திலிருந்து நமக்கு வருவதைப்போலத் தோன்றுகிறது. அது ஒரு கணம் மட்டுமே நீடிக்கும், ஆனால் நாம் அங்கே நீண்டகாலம்…